Monday, March 3, 2014

கிரக சேர்க்கை பலன்கள் 

நாடி ஜோதிடத்தில் கிரக சேர்க்கைகளுக்கு எப்படி பலன் கூறப்படுகிறதோ,அதே முறையில் கைரேகை கலையிலும் கிரக சேர்க்கை பலன்களையே கூறவேண்டும். 
சூரியன்+சந்திரன்
ஜாதகரின் தந்தையார் தான் பிறந்த இடத்தைவிட்டு குடிபெயர்ந்து வேறொரு இடத்தில் குடியேறுவார். ஜாதகரின் தந்தையார் சலன புத்தியுடையவர்,பிரயாணம் செய்வதில் விருப்பமுடையவர். ஜாதகருடைய தாய் தந்தையினிடையே ஒற்றுமை நிலவும்.
சூரியன்+செவ்வாய்
ஜாதகரின் தந்தையார் ஆணவமிக்கவர், தான் என்ற கர்வமுடையவர், அதிகார தோரணையுடையவர்.யாருக்கும் அடங்கிப்போகமாட்டார். சொந்தமாக நிலபுலன் உடையவர்.
சூரியன்+புதன்
ஜாதகரின் தந்தையார் புத்திசாலியாக இருப்பார்.சொந்தமாக நில புலன்கள் இருக்கும்.வாக்கு வன்மையுடையவர்.வியாபார நோக்கமுள்ளவர். கலகலப்பானவர்.
சூரியன்+குரு
ஜாதகரின் தந்தையார் நல்ல குணங்களையுடையவர்.இரக்க குணமுள்ளவர்.கடவுள் பக்தியுள்ளவர். தர்ம குணமுள்ளவர்.
சூரியன்+சுக்கிரன்
ஜாதகரின் தந்தையார் செல்வந்தராக இருப்பார். பெண்கள் மீது மோகமுள்ளவர். சொந்தமாக வீடு வாகனங்கள் இருக்கும். ஜாதகருக்கு புத்திர தோசம் உண்டு.
சூரியன்+சனி
ஜாதகரின் தந்தையார் சோம்பேறியாக இருப்பார் அல்லது எதிலும் மந்தமாக செயல்படும் குணமுள்ளவராக இருப்பார். ஜாதகருக்கும் அவருடைய தந்தையாருக்கும் ஒத்துப்போகாது.
சூரியன்+ராகு
ஜாதகரின் தந்தையார் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டிருப்பார். அவருக்கு ஆயுள் குறைவு.ஜாதகருக்கு கண் நோய் வரும்.
சூரியன்+கேது
ஜாதகரின் தந்தையார் மன விரக்தியுடையவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்.தனிமையை விரும்புபவர். ஜாதகருக்கு கண் நோய் வரும்.

சந்திரன் + சூரியன்
ஜாதகரின் தாயார் நிர்வாகத்திறமை உள்ளவர். தியாக மனப்பான்மை உள்ளவர். பிறர் நலம் காப்பதில் விருப்பம் உடையவர். ஜாதகருடைய தாய் தந்தையினிடையே ஒற்றுமை நிலவும்.
சந்திரன் +செவ்வாய்
ஜாதகரின் தாயார் ஆணவமிக்கவர், தான் என்ற கர்வமுடையவர், அதிகார தோரணையுடையவர்.யாருக்கும் அடங்கிப்போகமாட்டார். சொந்தமாக நிலபுலன் உடையவர்.
சந்திரன் +புதன்
ஜாதகரின் தாயார் புத்திசாலியாக இருப்பார்.சொந்தமாக நில புலன்கள் இருக்கும்.வாக்கு வன்மையுடையவர்.வியாபார நோக்கமுள்ளவர். கலகலப்பானவர். ஜாதகருக்கு தோல் வியாதி வரும்.
சந்திரன் +குரு
ஜாதகரின் தாயார் நல்ல குணங்களையுடையவர்.இரக்க குணமுள்ளவர்.கடவுள் பக்தியுள்ளவர். தர்ம குணமுள்ளவர். ஜாதகர் அனைவரையும் வசீகரிப்பார்.
சந்திரன் +சுக்கிரன்
ஜாதகரின் தாயார் செல்வந்தராக இருப்பார். சொகுசு விரும்பி. ஆடம்பர பிரியர். சொந்தமாக வீடு வாகனங்கள் இருக்கும். ஜாதகர் காம உணர்ச்சி அதிகம் உள்ளவர். ஜாதகருக்கு நீரழிவு வியாதி வரும். ஜாதகர் பெண்ணானால் அவருக்கு கருச்சிதைவு உண்டாகும்.
சந்திரன் +சனி
ஜாதகரின் தாயார் சோம்பேறியாக இருப்பார் அல்லது எதிலும் மந்தமாக செயல்படும் குணமுள்ளவராக இருப்பார். ஜாதகருக்கு அஜீரண கோளாரு உண்டு.
சந்திரன் +ராகு
ஜாதகரின் தாயார் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டிருப்பார். அவருக்கு ஆயுள் குறைவு. ஜாதகருக்கு கண் நோய் வரும்.
சந்திரன் +கேது
ஜாதகரின் தாயார் மன விரக்தியுடையவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்.தனிமையை விரும்புபவர். ஜாதகருக்கு கண் நோய் வரும்.

செவ்வாய்+ சூரியன்
ஜாதகரின் இளைய சகோதரர் நிர்வாகத்திறமை உள்ளவர். தியாக மனப்பான்மை உள்ளவர். பிறர் நலம் காப்பதில் விருப்பம் உடையவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +சந்திரன்
ஜாதகரின் இளைய சகோதரர் தான் பிறந்த இடத்தைவிட்டு குடிபெயர்ந்து வேறொரு இடத்தில் குடியேறுவார். ஜாதகரின் இளைய சகோதரர் சலன புத்தியுடையவர்,பிரயாணம் செய்வதில் விருப்பமுடையவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +புதன்
ஜாதகரின் இளைய சகோதரர் புத்திசாலியாக இருப்பார்.சொந்தமாக நில புலன்கள் இருக்கும்.வாக்கு வன்மையுடையவர்.வியாபார நோக்கமுள்ளவர். கலகலப்பானவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +குரு
ஜாதகரின் இளைய சகோதரர் நல்ல குணங்களையுடையவர்.இரக்க குணமுள்ளவர்.கடவுள் பக்தியுள்ளவர். தர்ம குணமுள்ளவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +சுக்கிரன்
ஜாதகரின் இளைய சகோதரர் செல்வந்தராக இருப்பார். சொகுசு விரும்பி. ஆடம்பர பிரியர். சொந்தமாக வீடு வாகனங்கள் இருக்கும். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +சனி
ஜாதகரின் இளைய சகோதரர் சோம்பேறியாக இருப்பார் அல்லது எதிலும் மந்தமாக செயல்படும் குணமுள்ளவராக இருப்பார்.
செவ்வாய் +ராகு
ஜாதகரின் இளைய சகோதரர் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டிருப்பார். அவருக்கு ஆயுள் குறைவு. ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +கேது
ஜாதகரின் இளைய சகோதரர் மன விரக்தியுடையவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்.தனிமையை விரும்புபவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும். ஜாதகருக்கு மூலம் வியாதி,குடலிறக்கம்,குடல் வால் வெடிப்பு போன்ற நோய்கள் வரும். ஜாதகர் ஆணானால் ஆண்மை குறைவு ஏற்பட வாய்ப்புண்டு.

Friday, May 10, 2013

பகைகிரகசேர்க்கைகளுக்குபரிகாரம்


பகைகிரகசேர்க்கைகளுக்குபரிகாரம்
பிருகு-  நந்திநாடிமுறையில் ஜாதகத்தில் உள்ள கிரக சேர்க்கைகளை கண்டறிந்து அவைகளில் காணப்படும் பகைக்கிரக சேர்க்கைகளுக்கு ,கிழமை மற்றும் ஹோரையை அனுசரித்து சிலபரிகாரங்களை செய்துகொள்ளலாம். அந்த வகையான பரிகாரமுறையைக்காண்போம்.
சூரியன்+சுக்கிரன்
ஜாதகத்தில் சூரியன் நின்ற நட்சத்திர பாதத்திலேயே சுக்கிரன் நின்றிந்தால் அதை சூரியன்,சுக்கிரன் சேர்க்கையாக எடுத்துகொள்ளலாம். அதாவது சூரியன் நின்ற பாகையிலிருந்து கணக்கிட 3 பாகை 20 கலைகளுக்குள் சுக்கிரன் இருக்கவேண்டும். இந்த சேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும் புத்திரதோசத்தை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரமாக பிரதி ஞாயிற்றுக்கிழமை, சூரியஹோரையில் மஹாலக்ஷ்மியை வழிபட்டுவர புத்திரதோசம் நீங்கும். அல்லது வெள்ளிக்கிழமை,சுக்கிர ஹோரையில் சிவனை வழிபட்டு வரவும்.
சூரியன்+சனி
ஜாதகத்தில் சூரியன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் சனி நின்றிருந்தால் அதை சூரியன்,சனி சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த கிரகசேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும், பித்ருதோசம் மற்றும் புத்திரதோசத்தை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரமாக பிரதி ஞாயிற்றுக்கிழமை,சூரியஹோரையில் சிவனைவழிபட்டுவர பித்ருதோசம் மற்றும் புத்திரதோசம் நீங்கும்.அல்லது சனிக்கிழமை,சனிஹோரையில் சிவனை வழிபட்டு வரவும்.
சந்திரன்+புதன்
ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் புதன் நின்றிருந்தால் அதை சந்திரன்,புதன் சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த கிரகசேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும் தோல்வியாதியை உண்டாக்கும், சஞ்சலபுத்தியைக்கொடுக்கும்,கெட்ட பெயரை உண்டாக்கும். இதற்கு பரிகாரமாக பிரதி திங்கள்கிழமை,சந்திரஹோரையில் விஷ்ணுவை வழிபட்டுவர இந்ததொல்லைகள் நீங்கும். அல்லது புதன்கிழமை,புதஹோரையில் கௌரியை வழிபட்டுவரவும்.
சந்திரன்+சுக்கிரன்
ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் சுக்கிரன் நின்றிருந்தால் அதை சந்திரன்,சுக்கிரன் சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த கிரகசேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும் பணவிரையத்தை எற்படுத்தும்,வீடு,வாகனங்களை இழக்கச்செய்யும்,வீட்டில்உள்ளபெண்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரமாக பிரதி திங்கள்கிழமை,சந்திரஹோரையில் மஹாலக்ஷ்மியை வழிபட்டுவர இந்த தொல்லைகள் நீங்கும். அல்லது வெள்ளிக்கிழமை, சுக்கிரஹோரையில் கௌரியை வழிபட்டுவரவும்.
சந்திரன்+சனி
ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் சனி நின்றிருந்தால் அதை சந்திரன்,சனி சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த கிரகசேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும் வாழ்க்கையில் எப்பொழுதும் ஒருவகையான சுணக்கத்தை ஏற்படுத்தும். காலாகாலத்தில் எதுவும் நடக்காது, முக்கிய நிகழ்வுகள் எல்லாம் காலதாமதமாகவே நடக்கும். இதற்கு பரிகாரமாக பிரதி திங்கள்கிழமை,சந்திரஹோரையில் சிவனை வழிபட்டுவர இந்த தொல்லைகள் நீங்கும். அல்லது சனிக்கிழமை,சனிஹோரையில் கௌரியை வழிபட்டுவரவும்.
செவ்வாய்+புதன்
ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் புதன் நின்றிருந்தால் அதை செவ்வாய்,புதன் சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த கிரகசேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும் கல்வியில் தடையை ஏற்படுத்தும்,சகோதர,சகோதரிகளிடையே பிணக்கை உண்டாக்கும். இதற்கு பரிகாரமாக பிரதி செவ்வாய்கிழமை,செவ்வாய் ஹோரையில் விஷ்ணுவை வழிபட்டுவர இந்த தொல்லைகள் நீங்கும்.அல்லது புதன்கிழமை,புதஹோரையில் முருகனை வழிபட்டு வரவும்.

செவ்வாய்+சனி
ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் சனி நின்றிருந்தால் அதை செவ்வாய்,சனி சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த கிரகசேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும் தொழில்தடையை ஏற்படுத்தும்,அடிக்கடி தொழில் மாற்றத்தை உண்டாக்கும். பெண்களுக்கு திருமணம் தாமதமாகும்.இதற்கு பரிகாரமாக பிரதி செவ்வாய்கிழமை, செவ்வாய் ஹோரையில் சிவனை வழிபட்டுவர இந்த தொல்லைகள் நீங்கும்.அல்லது சனிக்கிழமை, சனிஹோரையில் முருகனை வழிபட்டுவரவும்.






பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு


பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு





லக்கினம்
சந்திரன்
ஜாதக எண்: 01
ஜாதகரின் பெயர்: த.சதீஷ்குமார் (ஆண்)
ஜாதகரின் பிறந்த தேதி:04-12-1981
ஜாதகரின் பிறந்த  நேரம்:12-55
ஜாதகரின் பிறந்த ஊர்:சென்னை
ராசி
ராகு
சுக்கிரன்
கேது


சூரியன்
புதன்
குரு
சனி
செவ்வாய்

            ஜாதகரைக்குறிக்கும் கிரகமான  குருவுக்கு 2ல் புதன் உள்ளதால் ஜாதகர் கல்வி கற்பதில் ஆர்வமுடையவர். புதனும் செவ்வாயும் பரிவர்த்தனை அடைந்துள்ளதால் கல்வியில் தடை உண்டு.குருவுக்கு 2ல் சூரியன் உள்ளதால் ஜாதகர் எளிமையான தோற்றமுடையவர்,சமூகத்தின் மீது அக்கரையுடையவர்.தந்தையை சார்ந்து வாழும் சூழ்நிலை ஜாதகருக்கு உண்டு. குருவுக்கு 2ல் இரண்டு கிரகங்கள் உள்ளதால் ஜாதகருக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. குருவுக்கு 12ல் இரண்டு கிரகங்கள் உள்ளதால் ஜாதகருக்கு குடும்ப சுமைகளும் உண்டு. பரிவர்த்தனை பெற்ற செவ்வாய் குருவுக்கு 2ல் வந்து அமர்வதால் ஜாதகருக்கு திடீர் திடீரென கோபம் வரும்,ஜாதகர் கட்டுமஸ்தான உடல்வாகுடையவர். தற்காப்புக்கலையில் ஈடுபாடுடையவர்.         
            ஜாதகரைக்குறிக்கும் கிரகமான  குருவுக்கு 5ல் சந்திரன் உள்ளதால் ஜாதகர் பருத்த சரீரத்தையுடையவர், உணவுப்பிரியர். ஜாதகருக்கு பயண சுகம் உண்டு. தாய் மற்றும் மூத்த சகோதரியுடன் நல்லுறவு உண்டு. ஜாதகருக்கு அடிக்கடி அவமானங்களும்,கெட்ட பெயரும் உண்டாகும்.
            சனியும்,செவ்வாயும் ஒரே ராசியில் சேர்ந்து அமர்ந்துள்ளதால் ஜாதகருக்கு உடலில் காயம்பட்ட தழும்புகள் பல உண்டு. எதிரிகள் தொல்லை  நிறைய உண்டு. உத்யோகத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும். உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கிடைக்காது. இவர் தற்காப்புக்கலை,யோகா பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக சில காலம் செயல்படுவார். செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்ற புதன் சனியுடன் இணைவதால் இவர் கணக்கு பிள்ளையாக வேலை செய்வார்,ஆனால் போதிய அளவு உதியம் கிடைக்காது.
            தொழில் காரகனான சனிக்கு 5 ல் கேது இருப்பதால் இவர் எந்த தொழில் செய்தாலும் அதில் மனதிருப்தி ஏற்படாது. இதனால் எப்பொழுதும் மன விரக்தியுடன் காணப்படுவார். ஜோதிடம்,மருத்துவம்,ஆன்மீகம் போன்ற விசயங்களில் ஜாதகருக்கு ஈடுபாடு உண்டு.
            சனிக்கு 5ல் சுக்கிரன் உள்ளதால் ஓரளவிற்கு ஜாதகருக்கு பண வரவு உண்டு. சொந்தமாக சிறிய வகை வாகனங்கள் உண்டு.திருமண யோகம் உண்டு.
            சுக்கிரனும் கேதுவும் இணந்து காணப்படுவதால் ஜாதகருக்கு மணைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு,பிரிய வாய்ப்புண்டு. பணம்,வீடு சம்பந்தமான வழக்குகளை ஜாதகர் சந்திப்பார்.
            செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்ற புதன் கன்னியில் வந்து அமர்வார்,அந்த கன்னி ராசிக்கு 5 ல் கேது இருப்பதால்,புதன்,கேது சேர்க்கை உண்டாகிறது.எனவே ஜாதகருக்கு திருமணத்திற்கு முன் காதல் அனுபவங்கள் உண்டு. ஜாதகருக்கு நடு வயதில் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் வரும்.
            சனியும்,செவ்வாயும் ஒரே ராசியில் சேர்ந்து அமர்ந்துள்ளதால் ஜாதகருக்கு பல்வலி,பல்சொத்தை,குடல் புண் போன்ற வியாதிகள் வரும்.
            செவ்வாய்க்கு 5 ல் கேது  இருப்பதால் ஜாதகருக்கு மூல வியாதி,குடலிறக்கம்,குடல்வால் வீக்கம் போன்ற வியாதிகள் வர வாய்ப்புண்டு.
            சூரியனுக்கு 9ல் ராகு இருப்பதால் ஜாதகருடைய தந்தை பொய் பேசுவார். பரிவர்த்தனை பெற்ற செவ்வாய் சூரியனுடன் சேர்வதால் ஜாதகரின் தந்தை சமையல் தொழில் செய்வார். ஜாதகரின் தந்தை வாழ்க்கையின் முதல் பாதியில் ஒரு தொழிலும்,மறு பாதியில் வேறு தொழிலும் செய்வார்.
            சுக்கிரனுக்கு 2ல் சந்திரன் இருப்பதால்,ஜாதகருக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புண்டு. ஜாதகருடைய தாய்க்கும் மனைவிக்கும் ஒத்துப்போகாது.குடும்பத்தில் பெண்களிடையே ஒற்றுமை இருக்காது.
            கோட்சார சனி கடகத்தில் சஞ்சரிக்கும்போது (2004-2005 ம் வருடம்),ஜாதகருக்கு பண வருவாய் உண்டு.அதாவது மகரத்தில் அமர்ந்திருக்கும் ஜெனன கால சுக்கிரன் கோட்சார சனியை 7ஆம் பார்வையாக பார்க்கிறார்.பிறகு கோட்சார சனி கன்னியில் சஞ்சரிக்கும்போது (2011 ம் வருடம்) பண வருவாய் உண்டு. அதாவது மகரத்தில் அமர்ந்திருக்கும் ஜெனன கால சுக்கிரன் கோட்சார சனியை 9ஆம் பார்வையாக பார்க்கிறார். கோட்சார சனி கன்னியில் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு திருமணம் நடக்கும். கோட்சார சனி துலாம் ராசியில் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு   நல்ல உத்யோகம் அமையும். ஜெனன கால குரு துலாம் ராசியில் அமர்ந்துள்ளார்.

பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு


ராகு
சூரியன்

சனி
சுக்கிரன்



புதன்

ஜாதக எண்: 02
ஜாதகரின் பெயர்: ஸ்ரீநிவாசன் (ஆண்)
ஜாதகரின் பிறந்த தேதி:14-03-1969
ஜாதகரின் பிறந்த  நேரம்:22-10
ஜாதகரின் பிறந்த ஊர்:ராசிபுரம்
ராசி

சந்திரன்



செவ்வாய்
லக்கினம்

குரு
கேது

ஜாதகரைக்குறிக்கும் கிரகமான  குருவுடன் கேது சேர்ந்து உள்ளதால் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் உண்டு, ஜாதகர் வீட்டிற்கு முதல் குழந்தையாகவோ அல்லது கடைசி குழந்தையாகவோ இருப்பார். குருவுக்கு 5ல் சந்திரன் உள்ளதால் ஜாதகர் தான் பிறந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் குடியேறுவார். ஜாதகருக்கு பல முறை இடமாற்றம் ஏற்படும். குருவுக்கு 7 ல் சூரியன் இருப்பதால் ஜாதகருக்கு பொது சேவையில் ஈடுபாடு உண்டு.
சனியும் சுக்கிரனும் ஒரே ராசியில் இணைந்துள்ளதால் ஜாதகருக்கு வீடு,வாகன யோகம் உண்டு.ஜாதகருக்கு நிரந்தர வருமானம் உண்டு. செவ்வாய்க்கு 5ல் ராகு இருப்பதால் ஜாதகருக்கு பல்வரிசை ஒழுங்காக இருக்காது. சூரியனுடன் ராகு சேர்ந்து இருப்பதால் ஜாதகருக்கு கண் பார்வையில் கோளாறு உண்டு. சுக்கிரனுக்கு 6ல் குரு மறைந்திருப்பதால் ஜாதகருக்கும்,அவர் மனைவிக்கும் அதிக நெருக்கம் இருக்காது. சூரியனுக்கு 9ல் செவ்வாய் இருப்பதால் ஜாதகரின் தந்தைக்கு அதிக ரத்த அழுத்தம்,இருதய கோளாரு போன்ற நோய்கள் வரும்.
புதனும் சந்திரனும் அடுத்தடுத்த ராசிகளில் இருப்பதால் ஜாதகருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் வரும். தொண்டை நோய்களும் வர வாய்ப்புண்டு. செவ்வாய்க்கு இரு புறமும் கிரகங்கள் இல்லாமல் இருப்பதால், ஜாதகருடைய இளைய சகோதரனுக்கு குடும்பத்துடனான தொடர்புகள் நாளடைவில் இல்லாமல் போகும்.
குருவுடன் கேது சேர்ந்து கன்னியில் அமர்ந்துள்ளார். அதற்கு 5ல் மகரத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். எனவே குரு, சந்திரன், கேது சேர்க்கை ஏற்படுகிறது. குரு ஜீவனைக்குறிக்கும்,சந்திரன் மனதைக்குறிக்கும்,கேது மோட்சத்தைக்குறிக்கும்.எனவே ஜாதகன் இந்த பிறவியிலேயே ஜீவன் முக்தியடைவான்.ஜாதகனுக்கு மறு பிறப்பு கிடையாது.
குருவுடன் கேது சேர்ந்து கன்னியில் அமர்ந்துள்ளார்.அதற்கு இரு புறமும் கிரகங்கள் இல்லை.எனவே ஜாதகர் தன் கடைசி காலத்தில் தனிமையில் வாழ்வார்.
சந்திரனுக்கு 9ல் குருவும்,கேதுவும் அமர்ந்துள்ளதால் ஜாதகரின் தாய் தெய்வ பக்தியுடையவர். சூரியனுடன் ராகுவும்,அதற்கு 9ல் செவ்வாயும் இருப்பதால் ஜாதகரின் தந்தைக்கு தெய்வ பக்தி கிடையாது.தந்தையார் கோபக்காரர்.
சுக்கிரனுடன் சனி சேர்ந்துள்ளதால் மனைவி வேலைக்கு போகும் பெண்ணாக இருப்பார் அல்லது மனைவி மூலம் ஜாதகருக்கு ஏதாவது ஒரு வழியில் பணம் வரும். திருமணத்திற்கு பின் ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும்.
கோட்சார சனி மீனத்தில் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு அரசு உத்யோகம் கிடைக்கும் (ஏப்ரல் 1998 ). ஜெனன கால குரு கன்னியில் அமர்ந்துள்ளார்.அவர் கோட்சார சனியை பார்க்கிறார்.
கோட்சார சனி மேசத்திலும்,கோட்சார குரு மீனத்திலும் சஞ்சரிக்கும் காலம் ஜாதகருக்கு திருமணம் நடக்கும் (செப்டம்பர் 1998). ஜெனன கால சுக்கிரன் மேசத்தில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோட்சார குரு மேசத்தில் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறக்கும். ஜெனன கால சுக்கிரன் மேசத்தில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோட்சார சனியும், கோட்சார குருவும் இணைந்து ரிசப ராசியில் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு இட மாற்றம் உண்டாகும் (ஜூன் 2001). ரிசப ராசிக்கு 9ல் அமர்ந்துள்ள சந்திரன் கோட்சார சனியையும், கோட்சார குருவையும் பார்க்கிறார்.
கோட்சார குரு மிதுனத்தில் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு கல்வியை தொடர வாய்ப்பு கிடைக்கும் (ஜனவரி 2002). கோட்சார சனியும் ஆகஸ்ட் 2002 முதல் செப்டம்பர் 2004 வரை மிதுனத்தில் சஞ்சரிப்பார்.அந்த காலம் கல்வியை தொடர நல்ல காலம். அந்த கால கட்டத்தில் மிதுன ராசிக்கு 9 ல் இருக்கும் ஜெனன கால புதன் கோட்சார சனியை பார்க்கிறார்.
கோட்சார குரு மேசத்திலும்,கோட்சார சனி துலாம் ராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஜாதகருக்கு வாகனம் யோகம் ஏற்படும் (மே2012). ஜெனன கால சுக்கிரன் மேசத்தில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு


செவ்வாய்


லக்கினம்
சந்திரன்
கேது

ஜாதக எண்: 03
ஜாதகரின் பெயர்: பழனியப்பன் (ஆண்)
ஜாதகரின் பிறந்த தேதி:07-01-1955
ஜாதகரின் பிறந்த  நேரம்:17-37
ஜாதகரின் பிறந்த ஊர்:சிவகங்கை
ராசி
குரு
புதன்

ராகு
சூரியன்

சுக்கிரன்

சனி



ஜாதகரைக்குறிக்கும் கிரகமான  குருவுக்கு 5ல் சுக்கிரன் உள்ளதால் ஜாதகருக்கு கலை ஆர்வம் உண்டு. குருவுக்கு 7ல் புதன் உள்ளதால் ஜாதகருக்கு எழுத்தாற்றல்,பேச்சாற்றல் உண்டு. குருவுக்கு 9ல் செவ்வாய் உள்ளதால் ஜாதகருக்கு அடிக்கடி கோபம் வரும்
சூரியனுக்கு 7ல் சந்திரன் அமர்ந்துள்ளதால் ஜாதகரின் தந்தை தான் பிறந்த இடம் விட்டு வேறு இடத்தில் குடியேறுவார்.(சூரியன்-தந்தை,சந்திரன்- இடமாற்றம்)
சந்திரனுடன் கேது சேர்க்கை பெற்றிருப்பதால் ஜாதகர் தன் தாயுடன் கருத்துவேறுபாடு கொண்டிருப்பார்.(சந்திரன் –தாய்,கேது – கருத்து வேறுபாடு)
சனிக்கு 9ல் சந்திரனும்,கேதுவும் அமர்ந்துள்ளதால் ஜாதகர் தான் பிறந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் குடியேறுவார் அல்லது ஜாதகருக்கு அடிக்கடி இடமாற்றம் ஏற்படும்.ஜாதகர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஜாதகருக்கு உத்யோகத்தில் பிரச்சினைகள் உண்டு. உயர் அதிகாரிகளால் தொல்லைகள் உண்டு. ஜாதகருக்கு ஆன்மீகம்,மருத்துவம்,ஜோதிடம்
செவ்வாய்க்கு இரு புறமும் கிரகங்கள் இல்லை,எனவே ஜாதகருடைய சகோதரன் ஒருவன் குடும்பத்துடன் தொடர்பில்லாமல் தனியே சென்றுவிடுவான்.
குருவிற்கு 2ல் கிரகங்கள் இல்லை,எனவே ஜாதகருக்கு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த விதமான உதவியும் கிடைக்காது. குருவிற்கு 12ல் இரண்டு கிரகங்கள் உள்ளன, எனவே ஜாதகர் தன்னாலான உதவிகளை தன் குடும்பத்திற்கு செய்வார்.
குருவுக்கு 5ல் சுக்கிரன் இருப்பதால் ஜாதகருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடக்கும். கோட்சார குரு கடகத்தில் சஞ்சரிக்கும் காலம் (1978) ஜாதகருக்கு திருமணம் நடக்கும். கடகத்தில் சஞ்சரிக்கும் கோட்சார குருவை விருச்சிகத்தில் அமர்ந்திருக்கும் ஜெனன கால சுக்கிரன் பார்வை செய்வார்.
சுக்கிரனுக்கு 5ல் செவ்வாய் இருப்பதால்,ஜாதகரின் மனைவி கோபக்காரியாக இருப்பாள்  அல்லது பிடிவாதக்காரியாக இருப்பாள்.சுக்கிரனுக்கு 9ல் குரு இருப்பதால் ஜாதகரின் மனவி தெ
சனிக்கு 2ல் சுக்கிரன் அமர்ந்துள்ளார்,எனவே ஜாதகருக்கு சொந்த வீடு,வாகனங்கள் உண்டு. திருமணத்திற்குப்பின் ஜாதகருக்கு பொருளாதார மேன்மை உண்டாகும். 30 வயதிற்கு மேல் கோட்சார சனி விருச்சிகத்தில் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு நல்ல பண வரவு உண்டு. விருச்சிகத்தில் ஜெனன கால சுக்கிரன் அமர்ந்திருப்பது குறிப்பிட்த்தக்கது.
குரு,சுக்கிரன்,செவ்வாய் ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் திரிகோணமாக அமர்ந்துள்ளனர். சுக்கிரனுக்கு 2ல் ராகு அமர்ந்துள்ளார் எனவே குரு+சுக்கிரன்+செவ்வாய்+ராகு சேர்க்கை எற்படுகிறது,இதனால் ஜாதகருக்கோ அல்லது அவருடைய மனைவி,மகள் இவர்களில் யாராவது ஒருவருக்கு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
குருவுக்கு 6ல் சூரியன் மறைந்துவிட்டதால் ஜாதகருக்கும்,அவருடைய தந்தையாருக்குமிடையே பெரிய ஒட்டுதல் ,உறவாடுதல் எதுவும் இருக்காது.
சூரியன் நின்ற ராசிக்கு 10க்குடைய புதன் சூரியனுக்கு 2ல் இருப்பதால் ஜாதகரின் தந்தைக்கு வட்டித்தொழில்.சூரியனுடன், ராகு சேர்ந்திருப்பதால் ஜாதகரின் தந்தை அடிக்கடி நோய்வாய்ப்படுவார்.
குருவுக்கு 12 ல் கேது இருப்பதால் ஜாதகர் அவருடைய பெற்றோருக்கு முதல் குழந்தையாக இருப்பார் அல்லது கடைசி குழந்தையாக இருப்பார். 

பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு


கேது

செவ்வாய்


ஜாதக எண்: 04
ஜாதகரின் பெயர்: மணி (ஆண்)
ஜாதகரின் பிறந்த தேதி:24-09-1958
ஜாதகரின் பிறந்த  நேரம்:12-50
ஜாதகரின் பிறந்த ஊர்: சென்னை
ராசி

சந்திரன்

சுக்கிரன்
புதன்

லக்கினம்


சனி

குரு
சூரியன்
ராகு


ஜாதகரைக்குறிக்கும் கிரகமான  குருவுக்கு 12ல் இரண்டு கிரகங்கள்,குருவுக்கு 2ல் ஒரு கிரகம் எனவே ஜாதகருக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். சனிக்கு 7ல் செவ்வாய் இருப்பதால் சகோதரருடன் ஜாதகர் பகை.குருவுக்கு 6ல் செவ்வாய் மறைந்துவிட்டதால் ஜாதகரின் சகோதரனுடன் ஜாதகருக்கு அதிக தொடர்பு இருக்காது.
சந்திரனுக்கு 9ல் ராகு இருப்பதால் ஜாதகரின் தாய்க்கு வாத நோய் உண்டு. சந்திரனுக்கு 5ல் செவ்வாய் இருப்பதால் ஜாதகரின் தாய் கோபக்காரர்,பிடிவாதக்காரர்.
கோட்சார சனி சிம்மத்தில் சஞ்சரிக்கும்போது (2006-2007ல்) ஜாதகருக்கு  நல்ல பண வரவு உண்டு. வீடு,வாகனங்கள் அமையும்.
சனிக்கு 5ல் கேது இருப்பதால் ஜாதகருக்கு ஜோதிடம்,மருத்துவம்,ஆன்மிகம் இவைகளில் ஆர்வம் உண்டு. ஜாதகருக்கு சரியான தொழிலோ,உத்யோகமோ அமையாது.
சனிக்கு 7ல் செவ்வாய் இருப்பதால் ஜாதகருக்கு கடன் தொல்லைகள் உண்டு.
கோட்சார குரு சிம்மத்தில் சஞ்சரிக்கும்போது ( அக்டோபர் 1980) ஜாதகருக்கு திருமணம் நடக்கும். சுக்கிரனுக்கும் குருவிற்கும் இடையில் இரண்டு கிரகங்கள் இருப்பதால் ,ஜாதகருக்கும் அவர் மனைவிக்குமிடையே,குடும்ப உறுப்பினர்களால் பிரச்சினைகள் வரும்.
சூரியனுடன் ராகுவும்,அதற்கு 5ல் சந்திரனும் இருப்பதால் ஜாதகரின் தந்தைக்கு கப நோய்உண்டு.

பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு



லக்கினம்
செவ்வாய்


கேது
 சனி

ஜாதக எண்: 05
ஜாதகரின் பெயர்: ஹேமலதா(பெண்)
ஜாதகரின் பிறந்த தேதி:22-09-1973
ஜாதகரின் பிறந்த  நேரம்:20-15
ஜாதகரின் பிறந்த ஊர்: ராசிபுரம்
ராசி
சந்திரன்
குரு

ராகு



சுக்கிரன்

புதன்
சூரியன்

ஜாதகியைக்குறிக்கும் கிரகமான  சுக்கிரனுக்கு 7ல் செவ்வாய் இருப்பதால், ஜாதகி கோபக்காரியாகவும்,பிடிவாதக்காரியாகவும் இருப்பாள். சுக்கிரனுக்கு 9 ல் கேது இருப்பதால் ஜாதகிக்கு தெய்வ பக்தி உண்டு. ஆனால் விரக்தி மனப்பான்மையுடன் காணப்படுவார்.
புதனுடன் சூரியன் சேர்க்கை பெற்றுள்ளார்,அதற்கு 5ல் குரு அமர்ந்துள்ளார்,எனவே ஜாதகி கல்வியில் பட்டப்படிப்புவரை படிக்கும் வாய்ப்புண்டு.
சனிக்கு 5ல் சுக்கிரன் இருப்பதால் சொந்த வீடு,வாகனம் உண்டு.சொகுசுப்பொருட்கள் சேர்க்கையுண்டு.
சுக்கினுக்கு 10ல் சந்திரன் மறைந்திருப்பதால் ஜாதகிக்கு,அவர் தாயுடன் அதிக தொடர்புகள் இல்லாமல் போகும்.
செவ்வாய்க்கு இரு புறமும் கிரகங்கள் இல்லை,செவ்வாய்க்கு 7ல் அதிகப்படியான தூரத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளார்,எனவே  ஜாதகியின் கணவன் ஜாதகியைவிட்டு விலகியிருக்கவே விரும்புவான்.பிற்காலத்தில் கணவன் தனித்து வாழும் நிலை ஏற்படும்.
சூரியனுக்கு 5ல் குரு இருப்பதால் ஜாதகிக்கு நிச்சயமாக ஒரு ஆண் குழந்தையுண்டு.
கோட்சார சனி மேசத்திலும்,கோட்சார குரு மீனத்திலும் சஞ்சரிக்கும் காலம் ஜாதகிக்கு திருமணம் நடக்கும் (செப்டம்பர் 1998). ஜெனன கால செவ்வாய் மேசத்தில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோட்சார குரு மேசத்தில் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறக்கும். ஜெனன கால சுக்கிரன் மேசத்தில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோட்சார குரு மேசத்திலும்,கோட்சார சனி துலாம் ராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஜாதகருக்கு வாகனம் யோகம் ஏற்படும் (மே2012). ஜெனன கால சுக்கிரன் துலாத்தில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு




ராகு

சூரியன்
சுக்கிரன்

ஜாதக எண்: 06
ஜாதகரின் பெயர்: க.சரவணன் (ஆண்)
ஜாதகரின் பிறந்த தேதி:09-07-1984
ஜாதகரின் பிறந்த  நேரம்:07-50
ஜாதகரின் பிறந்த ஊர்: காரைக்குடி
ராசி
லக்கினம்
புதன்


குரு
கேது
 சந்திரன்
சனி
செவ்வாய்


ஜாதகரைக்குறிக்கும் கிரகமான  குருவுக்கு 12ல் இரண்டு கிரகங்கள்,குருவுக்கு 7ல் இரண்டு கிரகங்கள் அமர்ந்துள்ளன.அதில் சந்திரன் நீச்சம்,எனவே ஜாதகருக்கு உடன் பிறந்தவர்கள் 3 பேர்.
புதனுக்கு 5ல் சந்திரனும்,கேதுவும் அமர்ந்துள்ளனர்,எனவே ஜாதகர் காதலித்து அவமானப்படுவார்.ஜாதகருக்கு கல்வியில் தடை உண்டு.
சனியுடன் செவ்வாய் சேர்க்கை பெற்றுள்ளார்,எனவே ஜாதகருக்கு கடன் தொல்லைகள் உண்டு.பல் நோய் உண்டு.
சனியுடன் செவ்வாய் சேர்க்கை பெற்றுள்ளார்,சனிக்கு 2ல் கேதுவும்,சந்திரனும் உள்ளனர்,எனவே ஜாதகருக்கு சரியான உத்யோகம் அமையாது. சனிக்கு 9 ல் மற்றொரு பகை கிரகமான சூரியன் அமர்ந்துள்ளார். எனவே தொழில் விருத்தியில்லை.
சனிக்கு 2ல் கேதுவும்,சந்திரனும் உள்ளனர்,எனவே ஜாதகருக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டு.
சூரியனுக்கு 5ல் செவ்வாய் இருப்பதால் ஜாதகரின் தந்தையார் முன்கோபியாக இருப்பார்.அவருக்கு அதிக ரத்த அழுத்த நோய் உண்டு.
சனிக்கு 9ல் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் ஜாதகருக்கு வாகன சுகம் உண்டு. நிதி நிறுவனத்தில் ஜாதகர் வேலை செய்வார்.

பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு


கேது


புதன்
சூரியன்
லக்கினம்
குரு சுக்கிரன்
சந்திரன்

ஜாதக எண்: 07
ஜாதகரின் பெயர்: ஆர்.சம்பத் (ஆண்)
ஜாதகரின் பிறந்த தேதி:08-06-1978
ஜாதகரின் பிறந்த  நேரம்:07-50
ஜாதகரின் பிறந்த ஊர்: சோளிங்கர்
ராசி


சனி
செவ்வாய்



ராகு



ஜாதகரைக்குறிக்கும் கிரகமான  குருவுடன் சுக்கிரன் இருப்பதால்,ஜாதகருக்கு கலை ஆர்வம் உண்டு. குருவுடன் சந்திரன் இருப்பதால் ஜாதகருக்கு அவமானங்கள் உண்டாகும்.ஜாதகருக்கு பயண சுகம் உண்டு.
சந்திரனுடன் சுக்கிரன் இருப்பதால்,ஜாதகரின் தாய் அழகானவர்.சந்திரனுடன் குரு இருப்பதால் ஜாதகரின் தாய் அமைதியானவர்.பொறுப்பான பெண்.
சுக்கிரனுடன் சந்திரன் சேர்ந்திருப்பதால் ஜாதகரின் மனைவி அழகானவர்.
சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் ஜாதகர் நுட்பதொழில் செய்வார். ஜாதகருக்கு உத்யோகம் செய்யுமிடத்தில் தொல்லைகள் உண்டு.
சனியும்,செவ்வாயும் சிம்மத்தில் அமர்ந்திருக்க அதற்கு 2ல் ராகு உள்ளதால் ஜாதகருக்கு விபத்துக்கள் ஏற்படும்.
குருவுடன் சந்திரன் இருப்பதால் ஜாதகர் பிறந்த இடம் விட்டு வேறு இடத்தில் குடியேறுவார்.ஜாதகருக்கு பல முறை இட மாற்றம் உண்டாகும்.
சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் ஜாதகருக்கு கடன் தொல்லைகள் உண்டு.எதிரிகளால் தொல்லைகள் உண்டு.

சந்திராதி யோகங்கள்


சந்திராதி யோகங்கள்    
அனபா யோகம்                
“பம்” என்றால் ராசி என்று பொருள். “அனபம்” என்றால் முன் ராசி (12வது ராசி) என்று பொருள். சந்திரனுக்கு 12ல் கிரகம் இருந்தால் அது அனபா யோகம் எனப்படும்.
சுனபா யோகம்
“சுனபம்” என்றால்  பின் ராசி(2வது ராசி) என்று பொருள்.  சந்திரனுக்கு 2ல் கிரகமிருந்தால் அது சுனபா யோகம் எனப்படும்.
த்ருதரா யோகம்
“த்ரு” என்றால் “இரு பக்கம்” என்று பொருள். ”தரா” என்றால் “தராசு” என்று பொருள். தராசுக்கு இரு தட்டுகள் இருப்பது போல் சந்திரனுக்கு இரு புறமும் கிரகமிருந்தால் அது த்ருதரா யோகம் எனப்படும்.
கேமத்ரும யோகம்
“கேம” என்றால் “இல்லை” என்று பொருள். “த்ரும” என்றால் இரு பக்கம் என்று பொருள். “கேமத்ரும” என்றால் இரு பக்கமுமில்லை என்று பொருள்.சந்திரனுக்கு இரு பக்கமும் கிரகம் இல்லாமல் இருந்தால் அது கேமத்ரும யோகம் எனப்படும்.
அதி யோகம்
சந்திரனுக்கு 6-7-8 ல் கிரகங்கள் இருந்தால் அது அதி யோகம் எனப்படுகிறது. சந்திரனுக்கு 6ல் நிற்கும் கிரகம் ,சந்திரன் நின்ற வீட்டிற்கு 12 ம் வீட்டைப்பார்க்கும். சந்திரனுக்கு 7 ல் நிற்கும் கிரகம் சந்திரனை நேர்ப்பார்வையாக பார்க்கும். சந்திரனுக்கு 8 ல் நிற்கும் கிரகம் ,சந்திரன் நின்ற வீட்டிற்கு 2 ம் வீட்டைப்பார்க்கும்.
மேற்கண்ட யோகங்களை ஆய்வு செய்தால் ஒரு விசயம் புரியும். அதாவது சந்திரன் நின்ற ராசிக்கு 12-1-2 அல்லது 6-7-8 ல் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் அது நல்லது. அவ்வாறு இருந்தால் சந்திரன் மூலம் ஒரு யோகத்தை ஜாதகன் அனுபவிப்பான்.