Friday, May 10, 2013

ஜோதிடத்தில் யோகங்கள் என்றால் என்ன?


ஜோதிடத்தில் யோகங்கள் என்றால் என்ன?
யோகம் என்றால் சேர்க்கை அல்லது இணைவு என்று பொருள்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஜோதிட அங்கங்களை இணைத்து,அந்த இணைவால் என்னென்ன விளைவுகள் உண்டாகும் எனக் கணித்துக்கூறும் பலன்களை யோக பலன்கள் எனக்கூறுவர். ராசி,பாவம்,கிரகம் இவை மூன்றும் ஜோதிட அங்கங்களாகும். இந்த மூன்று அங்கங்களையும் ஒன்றோடொன்று இணைத்துதான் யோக பலன்கள் கூறப்படுகிறது.
ராசியையும்,கிரகத்தையும் இணைத்து சில யோக பலன்கள் கூறப்படுகின்றன. உதாரணமாக, ராகு தனுசு ராசியில் நின்றால் அதற்கு கோதண்ட ராகு என்று கூறுவர்.இதை ஒரு யோகமாக குறிப்பிடுகின்றனர்.
பாவத்தையும்,கிரகத்தையும் இணைத்து பல யோகங்கள் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, லக்னத்திற்கு 1-4-8 ல் புதனும்,சூரியனும் இணைந்திருந்தால் ,அது புத ஆதித்திய யோகம் எனக்கூறக்கூறப்படுகிறது.
ஒரு கிரகத்தை மற்றொரு கிரகத்தோடு இணைத்தும் யோக பலன்கள் கூறப்படுகின்றன.உதாரணமாக சந்திரனும்,செவ்வாயும் சேர்க்கை பெற்றிருந்தால் அது சந்திர மங்கள யோகம் எனக்கூறப்படுகிறது.இவ்வாறு ஜோதிட அங்கங்களை ஒன்றோடொன்று இணைத்து ஆயிரக்கணக்கான யோகங்கள் ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.
யோகம் என்றால் ஜாதகனிடம் வந்து சேர்வது அல்லது ஜாதகனோடு இணைக்கப்பட்டது என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது ஜாதகருக்கு எது வந்து சேரும்,அல்லது ஜாதகன் எதோடு தன்னை இணைத்துக்கொள்வான் என்பதை யோகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.



No comments:

Post a Comment