Thursday, November 1, 2012

பிருகு- நந்தி நாடி முறையில் வரவு –செலவு அறியும் விதம்:-


பிருகு- நந்தி நாடி முறையில் வரவு –செலவு அறியும் விதம்:-

பராசரர் ஜோதிட முறையில் பண வரவைக்குறிக்குமிடம் 2ம் பாவமாகும், செலவுகளைக்குறிக்குமிடம் 12ம் பாவமாகும். பிருகு-நந்தி நாடி முறையில் பாவங்களைக்கொண்டு பலன் கூறுவதில்லை. கிரகங்களைக்கொண்டே பலன் கூறப்படுகிறது. நாடி முறைப்படி ஜீவக்காரகனுக்கு 2ல் ஏதாவது ஒரு கிரகமாவது நின்றிருந்தால் ஜாதகருக்கு பண வரவு உண்டு. ஜீவக்காரகனுக்கு 12ல் கிரகங்கள் நின்றிருந்தால் ஜாதகருக்கு தவிர்க்க முடியாத செலவினங்கள் உண்டு. வரவு –செலவு சம்பந்தமான நாடி விதிகளைப்பார்ப்போம்.

1.         ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 2ல் பல கிரகங்கள் நின்றால் ஜாதகருக்கு பல வழிகளில் பண வரவு உண்டு.மேலும் பல நபர்களின் உதவிகள் ஜாதகருக்கு கிடைக்கும்.

2.         ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 12ல் பல கிரகங்கள் நின்றால் ஜாதகருக்கு தவிர்க்க முடியாத செலவினங்கள் உண்டு.

3.         ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 2ல் அதிகப்படியான எண்ணிக்கையில் கிரகங்களும், 12ல் குறைந்த எண்ணிக்கையில் கிரகங்களும் நின்றால் ஜாதகருக்கு வரவு அதிகம்,செலவு குறைவு.

4.         ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 12ல் அதிகப்படியான எண்ணிக்கையில் கிரகங்களும், 2ல் குறைந்த எண்ணிக்கையில் கிரகங்களும் நின்றால் ஜாதகருக்கு வரவு குறைவு,செலவு அதிகம்.

5.         ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 2ல் பல கிரகங்கள் நின்றிருக்க ,12ல் கிரகங்கள் எதுவும் இல்லாமல் இருந்தால் ஜாதகருக்கு நல்ல பண வரவு உண்டு.ஆனால் பெரிய அளவில் செலவினங்கள் எதுவும் இருக்காது.

6.         ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 12ல் பல கிரகங்கள் நின்றிருக்க ,2ல் கிரகங்கள் எதுவும் இல்லாமல் இருந்தால் ஜாதகருக்கு பண வரவு பெரிய அளவில் எதுவும் இருக்காது. ஆனால் தவிர்க்க முடியாத செலவினங்கள் இருந்துகொண்டேயிருக்கும்.

7.         பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு2-12ல் உள்ள கிரக நிலைகளைப்பார்த்து மேற்கண்ட பலாபலன்களைக்கூறவேண்டும். 

Friday, January 27, 2012

சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் முக்கியத்துவம்

சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் முக்கியத்துவம் 

            கோட்சாரத்தில் சனியும்,குருவும் ராசி மாறும்போது மனிதர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் கருத்து.சனி மற்றும் குரு ராசி மாறும் தினத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.ஜோதிடர்கள் சனி பெயர்ச்சி விழா, குரு பெயர்ச்சி விழா என்ற பெயர்களில் சிறப்பு யாகங்கள் நடத்துகிறார்கள். இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதைப்பார்ப்போம்.

            காலப்புருசனின் லக்னம் மேசமாகும்.மேசம் முதல் மீனம் வரை காலப்ப்புருசனின் அங்கங்களின் கீழ்கண்டவாறு அமையும்.

மேஷம்-தலை

ரிஷபம் -முகம்

மிதுனம் கைகள்

கடகம்-மார்பு

சிம்மம்- இருதயம்

கன்னி -அடி வயுறு

துலாம்-மர்ம உருப்பு

விருச்சிகம்-குதம்

தனுசு-தொடை

மகரம்-கால் மூட்டு

கும்பம்-கணுக்கால்

மீனம்-பாதம்

            காலப்புருச லக்னமான மேசத்திற்கு 9,12க்குடையவன் குருவாகும். 10,11க்குடையவன் சனியாகும்.காலபுருசனின் அங்கங்களான தொடை முதல் பாதம் வரை உள்ள கால் பகுதியை சனியும்,குருவும் ஆட்சி செய்கிறார்கள்.மனிதனைத்தாங்கிப்பிடிப்பது,நடக்க வைப்பது,ஓட வைப்பது எல்லாம் கால்கள்தான்.கால்கள் இல்லாதவனால் நகரமுடியாது.எனவே மனிதனின் இயக்கத்திற்கு கால்கள் மிகவும் இன்றியமையாததாகும்.சனியும்,குருவும் கோட்சரத்தில் ராசி சக்கரத்தில் நகர்ந்து செல்வதை மனிதனே ராசி சக்கரத்தில் நடந்து செல்வது போன்று பாவித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.இதன் காரணத்தினாலேயே சனி பெயர்ச்சிக்கும் குரு பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

            காலபுருசனுக்கு 9 ம் வீடான தனுசு  தர்மஸ்தானம் எனப்படுகிறது.10 ம் வீடான மகரம் கர்மஸ்தானம் எனப்படுகிறது.எனவே தனுசு ராசியின் அதிபதியான குரு தர்மக்காரகன் எனப்படுகிறான்.மகர ராசியின் அதிபதியான சனி கர்மக்காரகன் எனப்படுகிறான்.இங்கே கர்மம் என்பது விதியைக்குறிக்கும்.தர்மம் என்பது சுய முயற்சியைக்குறிக்கும்.எனவே இரு கால்களாக நின்று மனிதனைத்தாங்கிப்பிடிப்பது விதியும் சுயமுயற்சியும்தான்.இதில் ஒன்று இல்லையென்றாலும் மனிதனின் வாழ்க்கை ஊனமாகிவிடும்.அவனால் வாழ்க்கையை சுமுகமாக நடத்திச்செல்லமுடியாது. மனிதனுக்கு இரண்டு கால்களும் சமமாக இருப்பதால்தான் அவனால் நிற்க முடிகிறது,நடக்கமுடிகிறது. அதுபோல் விதியும்,முயற்சியும் சரிசமமாக செயல்பட்டால்தான் வாழ்க்கை நகரும்,இல்லையென்றால் வாழ்க்கை சரிவர நகராது.இதன்மூலம் நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் மனிதன் விதியை மட்டும் நம்பிக்கொண்டு இருக்கக்கூடாது,முயற்சியும் செய்யவேண்டும்.முயற்சி செய்தால்தான் விதிகூட சரியாக செயல்படும்.முயற்சி செய்யவில்லையென்றால் விதியும் ஊனமாகிவிடும்.

கிரக சேர்க்கைகளும் தசா-புக்தி பலன்களும்

கிரக சேர்க்கைகளும்  தசா-புக்தி பலன்களும்
            தசா-புக்தி பலன்கள் பல்வேறு வழிமுறைகளில் கூறப்படுகிறது .அதில் ஒரு முறைதான்  கிரஹ சேர்க்கைகளின் அடிப்படையில் பலன் கூறுவதாகும். கிரஹ சேர்க்கைகளில்  பரஸ்பரம் நட்பு பெற்ற கிரஹங்களின்  சேர்க்கை  எதுவோ, அந்த  கிரஹ சேர்க்கையில் சம்பந்தப்பட்ட கிரஹங்கள்  தங்கள் தசா-புக்தி காலங்களில் நற்பலன்களைத்தருகின்றன. கிரஹ சேர்க்கைகளில்  பரஸ்பரம் பகை பெற்ற கிரஹங்களின்  சேர்க்கை  எதுவோ, அந்த  கிரஹ சேர்க்கையில் சம்பந்தப்பட்ட கிரஹங்கள்  தங்கள் தசா-புக்தி காலங்களில் தீயபலன்களைத்தருகின்றன. கிரஹ சேர்க்கைகளைக்கொண்டு தசா-புக்தி பலன் கூறத்தேவையான ஜோதிட விதிகள் கீழே தரப்பட்டுள்ளன.

            (1) தசா நாதனும்,புக்தி நாதனும் பரஸ்பரம்  நட்பு கிரஹங்களாக அமைந்து , அதில் தசா நாதன்  நின்ற ராசிக்கு 1-5-9,3-7-11,2-12 ம் ராசிகளில் புக்தி நாதன் நின்றால் ,அவ்விரு கிரஹங்களின்  காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான  நற்பலன்கள் ஜாதகருக்கு தங்கு தடையின்றி அவ்விரு கிரஹங்களின் தசா-புக்தி காலங்களில்  கிடைக்கும்.

            (2) தசா நாதனும்,புக்தி நாதனும் பரஸ்பரம்  நட்பு கிரஹங்களாக அமைந்து , அதில் தசா நாதன்  நின்ற ராசிக்கு 4-6-8-10 ம் ராசிகளில் புக்தி நாதன் நின்றால் ,அவ்விரு கிரஹங்களின்  காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான  நற்பலன்கள் ஜாதகருக்கு கிடைக்காமல் அவ்விரு கிரஹங்களின் தசா-புக்தி காலங்களில்  தடைபடும்.

            (3) தசா நாதனும்,புக்தி நாதனும் பரஸ்பரம்  பகைக்கிரஹங்களாக அமைந்து , அதில் தசா நாதன்  நின்ற ராசிக்கு 1-5-9,3-7-11,2-12 ம் ராசிகளில் புக்தி நாதன் நின்றால் ,அவ்விரு கிரஹங்களின்  காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான  தீயபலன்கள் மட்டும் ஜாதகருக்கு  அவ்விரு கிரஹங்களின் தசா-புக்தி காலங்களில்  கிடைக்கும்.

            (4) தசா நாதனும்,புக்தி நாதனும் பரஸ்பரம்  பகைக்கிரஹங்களாக அமைந்து , அதில் தசா நாதன்  நின்ற ராசிக்கு 4-6-8-10 ம் ராசிகளில் புக்தி நாதன் நின்றால் ,அவ்விரு கிரஹங்களின்  காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான  தீயபலன்கள்  ஜாதகருக்கு கிடைக்காமல் அவ்விரு கிரஹங்களின் தசா-புக்தி காலங்களில்  தடைபடும்.

எழுதியவர்: சித்தயோகி சிவதாசன்ரவி

கிரககாரத்துவங்கள்

கிரககாரத்துவங்கள்

சூரியன்:
தந்தை, மகன், வலது கண், அரசாங்கம், அமைச்சர், ஆத்மா, புகழ், கீர்த்தி, மாநகரம், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர், சிவன், அரசியல்வாதி, வீட்டின் வலது ஜன்னல், சந்தன மரம், தேக்கு, பொன் ஆபரணம், மண், அணுத் தொழில், அறுவை சிகிச்சை நிபுணர், துப்பறிதல்,தந்தையின்தொழில்.தன்னம்பிக்கை,சுயமரியாதை,நிர்வாகத்திறமை,
தெய்வபக்தி, தராளமனப்பான்மை, இரக்கம்(கருணை, மனிதநேயம்), தியாக மனப்பான்மை,முன்கோபம்,பிடிவாதம்(வைராக்கியம்),தைரியம்.

சந்திரன்:
 மனம், ஆழம், அறிவு, புகழ், தாய், மாமியார், திரவப் பொருள், பயணம், உணவுப்பொருள், இடது கண், இடமாற்றம், கற்பனை, பால், நதி, கள்ளக்காதல், வீட்டின் இடப்புற ஜன்னல், துர்நடத்தை, குளிர்ச்சி, தாய்மாமன் மனைவி, சோதிடம், அரிசி வியாபாரம், பழ வியாபாரம்,கவிதை,ஓவியம்,நீர்தொடர்பானதொழில்,பார்வதி,கற்பனை,சலனபுத்தி,
அமைதி,சகிப்புத்தன்மை.

செவ்வாய்:

சகோதரன், கணவன், பழி வாங்குதல், மனவலிமை, காவல்துறை, இராணுவம், வெட்டுக் காயம், வீரம், பூமி, ரத்தம், பல், முருகன், எதிரிகள், கூர்மையான ஆயுதம், திருமணம், விவசாயம், அடுப்பு, மின் கருவி, பாறை, வீட்டு உத்திரம், தீயணைப்புத் துறை, செங்கல் சூளை, தாதுப் பொருட்கள், பொறியியல் துறை, சுரங்கத் துறை, அறுவை சிகிச்சை.
முன்கோபம், ஆத்திரம், அவசரம், அகங்காரம், வீரம், ஆணவம், கர்வம், வீன்சண்டை, வாக்குவாதம்,ஆதிக்கஉணர்வு.

புதன்:
 கல்வி, அறிவு, வணிகம், பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர், கணிதம், பத்திரிகைத் தொழில், நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம், கைகள், கழுத்து, வரவேற்பு அறை, உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி, புலனாய்வுத்துறை,தரகு, மஹாவிஷ்ணு, தூதரகப்பணி. பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைச்சுவை,வசீகரத்தன்மை,அறிவாற்றல்,தந்திரம்,கலகலப்பானவர்,கோழைத்தனம்.



குரு:
ஜீவன், வேதம், பக்தி, ஞானம், ஒழுக்கம், கோவில், வழக்கறிஞர், நீதிபதி, உயர்குலம், ஆசிரியர், கௌரவம், சாந்த குணம், தெற்கு, சதை, தொடை, பூஜை அறை, பசு, அமைச்சர், நிர்வாகி, மூக்கு, கரும்பு, வாழை, சோதிடம், நீதித்துறை, தட்சணாமூர்த்தி,சாந்தம், பொறுமை, தெய்வ நம்பிக்கை, உலக அறிவு (பொது அறிவு),மதிப்பு,மரியாதை,பண்பாடு,கண்ணியம்.

சுக்கிரன்:
 மனைவி, சகோதரி, காமம், காதல், பாடகன், நடிகன், வீடு சுகம், வாசனைத் திரவியங்கள், கருப்பை, கன்னம், வட்டித் தொழில், மதுபானம், ஆடை ஆபரணங்கள், மலர், வேசி, திருமணம், விந்து, பணம், இனிப்பு, சிறுநீரகம், கேளிக்கை விடுதி, துணிமணிகள், பிரம்மா, மஹாலட்சுமி, மூத்த சகோதரி, மூத்த மருமகள்,கலைஆர்வம்,ஆடம்பரபிரியம்.

சனி:
 மூத்த சகோதரன், சேவகன், கழுதை, எருமை, தொழில்காரகன், தாடை, பிட்டம், பூட்டு, ஜீரண உறுப்பு, சேமிப்பு அறை, சாப்பாட்டு அறை, சாலை, வாயு சம்பந்தமான நோய், நிலக்கரி, சோம்பேறித்தனம், பிச்சை எடுத்தல், தொழிற்சாலையில் எடுபிடி வேலை, ஹோட்டல் சுத்தம் செய்யும் வேலை, பழைய பொருள் விற்பனை, துப்புறவுத் தொழில், கால்நடை வளர்த்தல், லட்சுமி, பரமசிவன்,கர்மா,அரசுதூதுவர்.

ராகு:
வாய், உதடு, காது, முஸ்லீம், கோபுரம், அகலமான வீதி, தகப்பன் வழிப் பாட்டன், தலை, நிழல், மாயை, குடை, பாம்பின் தலை, கடத்தல் தொழில், உலர்ந்த தோல், பிளாஸ்டிக், இரசாயனம், மொட்டை மாடி, சேமிப்புக் கிடங்கு, விதவை, தொழுநோய், மருத்துவம், வெளிநாட்டு வர்த்தகம், விபசாரம் செய்தல், வாகனம் ஓட்டுதல், சினிமாத் தொழில், போகக்காரகன், வஞ்சகம், சூது,பொய், களவு.

கேது:
சாயா கிரகம், மோட்ச காரகன், ஞானம், தியானம், தவம், மௌனம், கயிறு, நூல், கூந்தல், மூலிகை, பாம்பின் வால், குறுகிய சந்து, மருத்துவம், சோதிடம், ஆன்மீகம், சட்டத்துறை, சந்நியாசம், துறவறம், தாய்வழிப் பாட்டன், நரம்பு, குளியல் அறை, ஞானம், மனவெறுப்பு, கொலை செய்தல்.

Tuesday, January 24, 2012

சப்த கிரஹ ப்ரஸ்ன நாடி


சப்த கிரஹ ப்ரஸ்ன நாடி

            சப்த கிரஹ ப்ரஸ்ன நாடியில் வாராதிபதியையும்,ஹோராதிபதியையும் கிரஹ சேர்க்கையாக எடுத்துக்கொண்டு பலன் கூற வேண்டும்.வாராதிபதிகள் என்பவை கிழமைகளின் அதிபதிகளாகும்.கிழமைகள் மொத்தம் ஏழு எனவே வாராதிபதிகள் மொத்தம் ஏழு பேராகும்.

கிழமை                  அதிபதி

ஞாயிறு                  சூரியன்

திங்கள்                   சந்திரன்

செவ்வாய்                செவ்வாய் 

புதன்                     புதன்

வியாழன்                 குரு

வெள்ளி                  சுக்கிரன்

சனி                      சனி

            வாராதிபதிகளாக வரும் அதே ஏழு கிரஹங்களே ஹோராதிபதிகளாகவும் வருவர்.ஒரு நாள் என்பது 24 மணி நேரம் கொண்டதாகும்.ஒரு ஹோரை என்பது 01 மணி நேரம் கொண்டதாகும். எனவே ஒரு நாளில் 24 ஹோரைகள் வரும்.கிரஹ ஹோரைகளின் வரிசை முறையானது  சூரியன்-சுக்கிரன்-புதன்-சந்திரன்-சனி-குரு-செவ்வாய் என அமைந்திருக்கும்.அந்தந்த கிழமைகளில் அந்தந்த கிழமை அதிபதிக்குரிய ஹோரை முதல் ஹோரையாக ஆரம்பித்து கிரஹ ஹோரைகளின் வரிசை முறையில் அடுத்தடுத்த ஹோரைகள் உதயமாகும்.வாராதிபதிகள் மற்றும் ஹோராதிபதிகளின் மொத்த எண்ணிக்கை ஏழு என்பதால் இந்த முறைக்கு சப்த கிரஹ ப்ரஸ்ன நாடி எனப் பெயரிடப்பட்டுள்ளது.இந்த முறையில் பலன் கூறுவதற்கு பிறப்பு ஜாதகமோ,ப்ரஸ்ன ஜாதகமோ தேவையில்லை.ஒருவர் கேள்வி கேட்கும் நேரத்திற்குரிய வாராதிபதியையும்,ஹோராதிபதியையும் தெரிந்து கொண்டு  அவ்விரண்டு கிரஹங்களையும் ஒரு கிரஹ சேர்க்கையாக எடுத்துக்கொண்டு அக்கிரஹ சேர்க்கைக்குரிய பலனை ப்ருகு-நந்தி நாடி முறையில் குறிப்பிட்டுள்ளபடி பலன் கூறினால் கேள்விக்கேட்டவருக்குரிய பதில் அதில் அடங்கியிருக்கும்.
 உதாரணமாக ஒருவர் வியாழக்கிழமை சனி ஹோரையில் பலன் கேட்க வந்தால் அவர் கேள்வி கேட்ட நேரத்திற்குரிய கிரஹ சேர்க்கை குரு+சனி ஆகும்.

குரு+சனி சேர்க்கைக்குரிய பலன்:

            ஜாதகர்  உத்யோகம்,தொழில் சம்பந்தமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அந்த முயற்சியில் அவர் வெற்றி பெறுவார்.ஏற்கனவே உத்யோகத்தில் இருப்பவரானால் உத்யோக உயர்வு உண்டு.கேள்வி கேட்பவர் சுய தொழில் செய்பவராக இருந்தால் தொழில் விருத்தி உண்டு. இவ்வாரு பலாபலங்களை நொடிப்பொழுதில் கூறலாம்.