சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் முக்கியத்துவம்
கோட்சாரத்தில் சனியும்,குருவும் ராசி மாறும்போது மனிதர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் கருத்து.சனி மற்றும் குரு ராசி மாறும் தினத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.ஜோதிடர்கள் சனி பெயர்ச்சி விழா, குரு பெயர்ச்சி விழா என்ற பெயர்களில் சிறப்பு யாகங்கள் நடத்துகிறார்கள். இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதைப்பார்ப்போம்.
காலப்புருசனின் லக்னம் மேசமாகும்.மேசம் முதல் மீனம் வரை காலப்ப்புருசனின் அங்கங்களின் கீழ்கண்டவாறு அமையும்.
மேஷம்-தலை
ரிஷபம் -முகம்
மிதுனம் கைகள்
கடகம்-மார்பு
சிம்மம்- இருதயம்
கன்னி -அடி வயுறு
துலாம்-மர்ம உருப்பு
விருச்சிகம்-குதம்
தனுசு-தொடை
மகரம்-கால் மூட்டு
கும்பம்-கணுக்கால்
மீனம்-பாதம்
காலப்புருச லக்னமான மேசத்திற்கு 9,12க்குடையவன் குருவாகும். 10,11க்குடையவன் சனியாகும்.காலபுருசனின் அங்கங்களான தொடை முதல் பாதம் வரை உள்ள கால் பகுதியை சனியும்,குருவும் ஆட்சி செய்கிறார்கள்.மனிதனைத்தாங்கிப்பிடிப்பது,நடக்க வைப்பது,ஓட வைப்பது எல்லாம் கால்கள்தான்.கால்கள் இல்லாதவனால் நகரமுடியாது.எனவே மனிதனின் இயக்கத்திற்கு கால்கள் மிகவும் இன்றியமையாததாகும்.சனியும்,குருவும் கோட்சரத்தில் ராசி சக்கரத்தில் நகர்ந்து செல்வதை மனிதனே ராசி சக்கரத்தில் நடந்து செல்வது போன்று பாவித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.இதன் காரணத்தினாலேயே சனி பெயர்ச்சிக்கும் குரு பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
காலபுருசனுக்கு 9 ம் வீடான தனுசு தர்மஸ்தானம் எனப்படுகிறது.10 ம் வீடான மகரம் கர்மஸ்தானம் எனப்படுகிறது.எனவே தனுசு ராசியின் அதிபதியான குரு தர்மக்காரகன் எனப்படுகிறான்.மகர ராசியின் அதிபதியான சனி கர்மக்காரகன் எனப்படுகிறான்.இங்கே கர்மம் என்பது விதியைக்குறிக்கும்.தர்மம் என்பது சுய முயற்சியைக்குறிக்கும்.எனவே இரு கால்களாக நின்று மனிதனைத்தாங்கிப்பிடிப்பது விதியும் சுயமுயற்சியும்தான்.இதில் ஒன்று இல்லையென்றாலும் மனிதனின் வாழ்க்கை ஊனமாகிவிடும்.அவனால் வாழ்க்கையை சுமுகமாக நடத்திச்செல்லமுடியாது. மனிதனுக்கு இரண்டு கால்களும் சமமாக இருப்பதால்தான் அவனால் நிற்க முடிகிறது,நடக்கமுடிகிறது. அதுபோல் விதியும்,முயற்சியும் சரிசமமாக செயல்பட்டால்தான் வாழ்க்கை நகரும்,இல்லையென்றால் வாழ்க்கை சரிவர நகராது.இதன்மூலம் நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் மனிதன் விதியை மட்டும் நம்பிக்கொண்டு இருக்கக்கூடாது,முயற்சியும் செய்யவேண்டும்.முயற்சி செய்தால்தான் விதிகூட சரியாக செயல்படும்.முயற்சி செய்யவில்லையென்றால் விதியும் ஊனமாகிவிடும்.

Sir,
ReplyDeleteGod is Witnessing your Efforts in Spreading the Divine Science.Your Knowledge in Astrology is Unparalleled.Keep Blogging.All is Well.
அருமையான பதிவு..... முயற்சியின் முக்கியத்துவம் நன்றாக சொன்னிர்கள்... நன்றி வணக்கம்
ReplyDeleteHard Rock Hotel and Casino Lake Tahoe
ReplyDeleteFeaturing 이천 출장마사지 10 restaurants and bars, Hard Rock 공주 출장안마 Hotel and Casino Lake Tahoe 화성 출장마사지 is a AAA Five Diamond 울산광역 출장샵 award-winning hotel in 세종특별자치 출장샵 Stateline, Nevada.