Tuesday, January 24, 2012

சப்த கிரஹ ப்ரஸ்ன நாடி


சப்த கிரஹ ப்ரஸ்ன நாடி

            சப்த கிரஹ ப்ரஸ்ன நாடியில் வாராதிபதியையும்,ஹோராதிபதியையும் கிரஹ சேர்க்கையாக எடுத்துக்கொண்டு பலன் கூற வேண்டும்.வாராதிபதிகள் என்பவை கிழமைகளின் அதிபதிகளாகும்.கிழமைகள் மொத்தம் ஏழு எனவே வாராதிபதிகள் மொத்தம் ஏழு பேராகும்.

கிழமை                  அதிபதி

ஞாயிறு                  சூரியன்

திங்கள்                   சந்திரன்

செவ்வாய்                செவ்வாய் 

புதன்                     புதன்

வியாழன்                 குரு

வெள்ளி                  சுக்கிரன்

சனி                      சனி

            வாராதிபதிகளாக வரும் அதே ஏழு கிரஹங்களே ஹோராதிபதிகளாகவும் வருவர்.ஒரு நாள் என்பது 24 மணி நேரம் கொண்டதாகும்.ஒரு ஹோரை என்பது 01 மணி நேரம் கொண்டதாகும். எனவே ஒரு நாளில் 24 ஹோரைகள் வரும்.கிரஹ ஹோரைகளின் வரிசை முறையானது  சூரியன்-சுக்கிரன்-புதன்-சந்திரன்-சனி-குரு-செவ்வாய் என அமைந்திருக்கும்.அந்தந்த கிழமைகளில் அந்தந்த கிழமை அதிபதிக்குரிய ஹோரை முதல் ஹோரையாக ஆரம்பித்து கிரஹ ஹோரைகளின் வரிசை முறையில் அடுத்தடுத்த ஹோரைகள் உதயமாகும்.வாராதிபதிகள் மற்றும் ஹோராதிபதிகளின் மொத்த எண்ணிக்கை ஏழு என்பதால் இந்த முறைக்கு சப்த கிரஹ ப்ரஸ்ன நாடி எனப் பெயரிடப்பட்டுள்ளது.இந்த முறையில் பலன் கூறுவதற்கு பிறப்பு ஜாதகமோ,ப்ரஸ்ன ஜாதகமோ தேவையில்லை.ஒருவர் கேள்வி கேட்கும் நேரத்திற்குரிய வாராதிபதியையும்,ஹோராதிபதியையும் தெரிந்து கொண்டு  அவ்விரண்டு கிரஹங்களையும் ஒரு கிரஹ சேர்க்கையாக எடுத்துக்கொண்டு அக்கிரஹ சேர்க்கைக்குரிய பலனை ப்ருகு-நந்தி நாடி முறையில் குறிப்பிட்டுள்ளபடி பலன் கூறினால் கேள்விக்கேட்டவருக்குரிய பதில் அதில் அடங்கியிருக்கும்.
 உதாரணமாக ஒருவர் வியாழக்கிழமை சனி ஹோரையில் பலன் கேட்க வந்தால் அவர் கேள்வி கேட்ட நேரத்திற்குரிய கிரஹ சேர்க்கை குரு+சனி ஆகும்.

குரு+சனி சேர்க்கைக்குரிய பலன்:

            ஜாதகர்  உத்யோகம்,தொழில் சம்பந்தமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அந்த முயற்சியில் அவர் வெற்றி பெறுவார்.ஏற்கனவே உத்யோகத்தில் இருப்பவரானால் உத்யோக உயர்வு உண்டு.கேள்வி கேட்பவர் சுய தொழில் செய்பவராக இருந்தால் தொழில் விருத்தி உண்டு. இவ்வாரு பலாபலங்களை நொடிப்பொழுதில் கூறலாம்.


No comments:

Post a Comment